Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - 6,032 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதி கட்ட பயிற்சி :

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நேற்று நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6,032 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு 3-ம் கட்டமாக கணினி முறையில் பணி ஒதுக்கீட்டை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளில் 1,371 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. இதில், 154 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

4 தொகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண் காணிப்புப்பணியில் ஈடுபட உள்ள நுண்பார்வையாளர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 6-ம் தேதி (நாளை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. இதையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ளவர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு நேற்று நடைபெற்றது. தேர்தல் பொது பார்வையாளர்கள் நீல்காந்த் ஆவத், மனோஜ்கத்தாரி, காவல் பார்வையாளர் அவினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்து கணினி முறையில் பணி ஒதுக்கீட்டை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், வாணியம்பாடி தொகுதிக்கு 1,444 வாக்குச்சாவடிஅலுவலர்கள், திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் தொகுதிகளுக்கு தலா 1,340 வாக்குச்சாவடி அலுவலர்கள், ஜோலார்பேட்டை தொகுதிக்கு 1,360 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 6,032 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

அதேபோல, 154 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப் பட்டுள்ளன. இங்கு. 171 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இவர்கள், அனைவரும் கணினி முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் உடனுக்கு உடன் தயாரிக்கப்பட்டு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கப்பட்டு வருகிறது.

இறுதிக்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு ஏப்ரல் 5-ம் தேதி (இன்று) நேரில் சென்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான முன்னேற் பாடுகளை மேற்கொள்ள வேண் டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்ய பாண்டியன், நேர்முக உதவியாளர்கள் (பொது) வில்சன் ராஜசேகர், (தேர்தல்) முருகானந் தன், சார் ஆட்சியர் வந்தனாகர்க் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x