Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM

சட்டப்பேரவை தேர்தலையொட்டி - வாக்கு எண்ணும் மையங்களில் : கேமரா கட்டுப்பாட்டு அறைகள் : வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர், அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் கேமரா கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அமைக் கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறைகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் 3 இடங்களில் அமைக் கப்பட்டுள்ளன. குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி களுக்கான வாக்கு எண்ணும் பணி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், காட்பாடி தொகுதிக்கு காட் பாடியில் உள்ள சட்டக்கல்லூரி வளாகத்திலும் வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிகளுக்கு தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

இந்த மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபாட் கருவிகள் வைக்கவும் பாதுகாப்பு அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் கரோனா விதிகளின்படி மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளன. காவல் கண்காணிப்பு கோபுரங்கள், மின் விளக்கு வசதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கான கழிப்பறை வசதிகள், அவர்கள் வந்து செல்ல தனித்தனி பாதை என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஆய்வு செய்ய கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், வேலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 58 கண்காணிப்பு கேமராக்கள், அணைக்கட்டு தொகுதிக்கான மையத்தில் 48, குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதிக்கு தலா 40 வீதம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகள் குறித்து வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் உள்ள மையங்களில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஷேக் மன்சூர் (குடியாத்தம்), பானு (கே.வி.குப்பம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x