Published : 01 Apr 2021 03:15 am

Updated : 01 Apr 2021 03:15 am

 

Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

பாதாள சாக்கடைத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் : சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் நா.கார்த்திக் உறுதி

கோவை

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.கார்த்திக், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட காந்திமாநகர்,  ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

அப்போது அவர் பேசும்போது,‘‘ நான் துணை மேயராக இருந்த போது, ராம் நகர்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தந்தேன். மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டது. தெருவிளக்கும்அமைத்துத் தரப்பட்டது. தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டாலே போதும், நான் இருசக்கர வாகனத்தில் இப்பகுதிக்கு வந்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன். கழிவுநீர் சீராக செல்ல திமுக ஆட்சியின் போது, பாதாள சாக்கடைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் அத்திட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற பகுதிகளில் திறந்தவெளி சாக்கடைத்திட்டம் செயல்படுத்தக்கூடாது. திமுகஆட்சிக்கு வந்தவுடன் பாதாளசாக்கடைத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். இத்தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படைவசதிகளும் செய்து தரப்படும்’’ என்றார். பிரச்சாரத்தின் போது, பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, பகுதி பொறுப்பாளர்கள் ஷேக் அப்துல்லா, பக்ருதீன், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.கோவை 40-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட, சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

89 :

இன்றைய செய்தி

More From this Author

x