Published : 01 Apr 2021 03:16 am

Updated : 01 Apr 2021 03:16 am

 

Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM

ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் துரோகம் செய்யவில்லை : தேனியில் புகழேந்தி பிரச்சாரம்

தேனி

முன்னாள் முதல்வர் ஜெயல லிதாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும் துரோகம் செய்யவில்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.

தேனியில் அவர் நேற்று கூறியதாவது: அமமுகவை தினகரன் தேவையில்லாமல் ஆரம்பித்துள்ளார். ஒரு கட்சியை நடத்திக் கொண்டு, இன்னொரு கட்சியை எப்படி மீட்க முடியும். இந்த தேர்தலுடன் அமமுக காணாமல் போகும்.


சசிகலா வந்ததும் பெரிய மாற்றம் வரும் என்றனர். ஆனால், அவரோ ஆன்மிகப் பணிகளுக்குச் சென்று விட்டார். கூட்டணியில் இருந்தாலும் பாஜக, அதிமுகவின் கொள்கைகள் வேறு வேறாகத்தான் உள்ளது.

ஸ்டாலின் போடியில் பேசும் போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்றும், ஜெயலலிதாவுக்கு துரோ கம் செய்தவர் என்றும் பேசினார்.

ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வத் திடம்தான் கட்சி தொடர்பாக அதிகமுறை ஆலோசனை நடத்தி இருக்கிறார். கொடுத்த முதல்வர் பதவியை அப்படியே மீண்டும் ஒப்படைத்தவர் என்ற முறை யில் ஓ.பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதாவுக்கு நல்ல மதிப்பு உண்டு. ஆனால் அதிமுகவில் பல்வேறு பதவிகளையும், பொறுப் புகளையும் அனுபவித்துவிட்டு தங்க தமிழ்ச்செல்வன்தான் துரோகியாக மாறி திமுகவில் இணைந்துள்ளார்.

இன்னமும் அதிமுகவில் இருப் பதாக நினைத்துக் கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் ஒருமுறை பேட்டியில் திமுக ஆட்சிக்கு வராது.. வரவே வராது.. என்று அழுத்தமாகக் கூறிவிட்டார்.

அதைப் பார்த்த ஸ்டாலினுக்கு அவர் மீது கோபம். எனவே போடியில் சிங்கம் போன்று களத்தில் நிற்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக களத்தில் இறக்கி விட்டுவிட்டார். ஏற்கெனவே துணை முதல்வர் மகனிடம் தோற்றார். தற்போது ஓ.பன்னீர்செல்வத்திடமும் தோற்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x