Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

அசாம், மே.வங்கத்தில் 69 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது :

அசாமில் 3 கட்டமாகவும் மேற்கு வங்கத் தில் 8 கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரு மாநிலங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (ஏப்.1) நடைபெறுகிறது. அசாமில் 39 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள் என மொத்தம் 69 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இத்தொகுதகளில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை ஓய்வுக்கு வந்தது.

மேற்கு வங்கத்தின் 30 தொகுதிகளில் மொத்தம் 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மிக முக்கிய வேட்பாளராக முதல்வர் மம்தா பானர்ஜி திகழ்கிறார். நந்திகிராம் தொகுதியில் இவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x