Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது - புதிய வகை கரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லை : சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் புதிய வகை இரட்டை உருமாறிய கரோனா தொற்று இன்னும் யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனிடையே தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்கியது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையத்தை சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ‘முகக் கவசம் அணிவோம் - சமூக இடை வெளியை கடைப்பிடிப்போம்’ என்ற உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. மூத்த செயலாளர்கள் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, தொற் றின் தாக்கம் குறித்து தலைமைச் செயலாளருக்கு அறிக்கை கொடுத்து வருகிறோம்.

முகக்கவசம் அணியும் பழக்கம் பொதுமக்களிடம் அறவே இல்லை. புதிய வகை இரட்டை உருமாறிய கரோனா தொற்று இன்னும் யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்புள்ள 512 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் பணியாளர்களில் 40 சதவீதத் தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். அதிகாரிகள் உட்பட அனைவரும் தடுப் பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். தேர்தல் நாளில் வாக்களிக்க செல்வோ ருக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்வது குறித்து போக்குவரத்து செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1,971 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நேற்று 1,971 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்ச மாக சென்னையில் 739 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 75,190 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 4,416 பேர் உட்பட 11,318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் முதியவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 12,650 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1 கோடியே 91 லட்சத்து 77,274 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x