Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

கோவை வடக்கு, கவுண்டம்பாளையத்தில் அதிமுக பிரச்சாரம் :

கோவை வடக்கு தொகுதி அதிமுகவேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன் பல்வேறு பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர், மணியக்காரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விலையில்லா 6 சமையல் காஸ் சிலிண்டர்கள், இலவச கேபிள் டிவி இணைப்பு, குலவிளக்கு திட்டம், உழவு மானியம், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், பேருந்து, மின் கட்டண சலுகைகள் போன்ற திட்டங்களை முன்வைத்து வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தி ன்போது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கவுண்டம்பாளையம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேற்று பாலமலை பகுதியில் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.

அப்போது, சாலை வசதி இல்லாத அந்த கிராமத்துக்கு உரிய சாலை வசதி, போக்குவ ரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும், அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தி தருவதாகவும் உறுதியளித்தார்.

மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x