Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM

வேதாத்திரி மகரிஷியின் 15-ம் ஆண்டு நினைவு நாள் - மார்ச் 28-ம் தேதி பஞ்சபூத நவக்கிரகத் தவம் : ஆன்லைனில் 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்

வேதாத்திரி மகரிஷியின் 15-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வரும் 28-ம் தேதி ஆன்லைன் மூலம் 1 லட்சம் பேர் பங்கேற்கும் பஞ்சபூத நவக்கிரகத் தவம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக் கலை பேராசிரியர்ப.வெள்ளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்ச் 28-ம் தேதி தத்துவ ஞானிவேதாத்திரி மகரிஷியின் 15-ம்ஆண்டு நினைவு நாளாகும். அவர்பல தவ முறைகளை விளக்கியுள்ளார். அவற்றை தவம் பயின்றவர்கள் மட்டும்தான் மேற்கொள்ள முடியும். ஆனால், அவர் முதன்முதலில் பஞ்சபூத நவக்கிரகத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார். அத்தவத்தை அனைவரும் மேற்கொள்ளலாம்.

மனவளக்கலை மன்றத்தின் சார்பில் வரும் 28-ம் தேதி மாலை 6 மணிக்கு பஞ்சபூத நவக்கிரகத் தவம் மேற்கொள்ள ஆழியாறு அறிவுத்திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் நம் நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாட்டு அன்பர்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.

கின்னஸ் சாதனைக்காக 1 லட்சம்பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிகழ்ச்சியை ‘ஃஸ்கை யோகா’ டிவி யூடியூப் சேனலில் டபுள்யு.சி.எஸ்.சி-ஸ்மார்ட் இயக்குநர், முதுநிலை பேராசிரியர் எம்.கே.தாமோதரன் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்முறை விளக்கம் கொடுத்து தவம் நடத்த உள்ளார்.

இதில், ‘இந்து தமிழ் நாளிதழ்’ வாசகர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். தரையில் ஏதேனும்ஒரு விரிப்பில் அமர்ந்து கொண்டோ, நாற்காலியில் அமர்ந்து கொண்டோ இருகைகளையும் கோத்து, கண்களை மூடிக்கொண்டு இந்தத் தவத்தை மேற்கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x