Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

கரோனா பரிசோதனையை அதிகரிக்க - டாடாஎம்டி நிறுவனம் ஏடிஎல் நிறுவனத்துடன் கூட்டு :

கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க டாடா மெடிக்கல் அண்ட் டயக்னாஸ்டிக்ஸ் (டாடாஎம்டி) நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் அண்ட் லேப்ஸ் (ஏடிஎல்) என்ற நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது.

‘டாடாஎம்டி செக்’ என்ற கரோனா பரிசோதனை முறையைடாடாஎம்டி நிறுவனம் கடந்தநவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் புதிய வகை கரோனா வைரஸை உடனடியாக கண்டறியும் வகையில் ‘டாடாஎம்டி செக்’ பயன்பாட்டை பரவலாக எடுத்துச் செல்லும் நோக்கில் ஏடிஎல் நிறுவனத்துடன் டாடாஎம்டி நிறுவனம் கூட்டிணைவு மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஏடிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கூறியபோது, ‘டாடாஎம்டி செக்’கானது இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்கள், கிராமங்களில் கரோனா சோதனையை மேற்கொள்ள சிறிய ஆய்வகங்களுக்கு ஊக்கம் தரும்’ என்றார்.

‘டாடாஎம்டி’யின் நிர்வாகஇயக்குநர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ‘கரோனா தொற்றுமிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதும், நோய்த் தொற்றைக் கண்டறிவதும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.ஏடிஎல் நிறுவனத்துடனான எங்கள்இணைவு அதனைச் சாத்தியப்படுத்தும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x