Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM

ஐஜேகேவுக்கு ஆட்டோ, கரும்பலகை, பிரஷ் சின்னம் :

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இவற்றில் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, செங்கல்பட்டு, காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி), பர்கூர், தளி, செங்கம்(தனி), கலசப்பாக்கம், மைலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி), ஏற்காடு(பழங்குடி), வீரபாண்டி, ராசிபுரம்(தனி), நத்தம், குளித்தலை, மணப்பாறை, திருவரங்கம், பெரம்பலூர்(தனி), அரியலூர், ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், நெய்வேலி, புவனகிரி, நன்னிலம், பேராவூரணி, திருப்பத்தூர்(சிவகங்கை), சாத்தூர், ஒட்டப்பிடாரம்(தனி) ஆகிய 35 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல அரூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு 'பிரஷ்' சின்னமும், கெங்கவல்லி (தனி), சேந்தமங்கலம் (பழங்குடி), திருவிடைமருதூர் (தனி), திருவையாறு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கரும்பலகை சின்னமும் தேர்தல் ஆணையம் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x