Published : 24 Mar 2021 03:15 AM
Last Updated : 24 Mar 2021 03:15 AM

அருப்புக்கோட்டை பிரச்சாரக் கூட்டத்தில் - திமுக, காங்கிரஸ் கட்சியினர் மோதல் :

அருப்புக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டனர்.

அருப்புக்கோட்டையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரனை ஆதரித்து அக்கட்சி இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிவன் கோயில் முக்கு ரோட்டில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அப்பகுதியில் ஏராள மான திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சியினர் திரண்டிருந்தனர். கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர் மீது திமுக தொண்டர் ஒருவர் இடித்துவிட்டார். இதையடுத்து அவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் சரமாரியாகத் தாக்கினர். அருகில் இருந்த இரு கட்சி நிர்வாகிகளும், போலீஸாரும் மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x