Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகளுக்காக - 1,000 சக்கர நாற்காலிகள் கொள்முதல் :

வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த 1,000 சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எந்த சிரமமும் இல்லாமல் வாக்களிப்பதற்கு தேவையானநடவடிக்கைகளை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையம் அதிகாரிகளுடன் இணைந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக 1,000 சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாக்குசாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் சுலபமாக சென்று வர தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வுசெய்து வருகிறோம். வாக்குசாவடிமையங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக 1,000 சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்வதற்கான பணிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் மூலம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலதினங்களில் வாக்குசாவடிகளுக்கு சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்படும். மாற்றுத் திறனாளிகள் எந்த சிரமமும் இன்றி வாக்களிப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x