Published : 22 Mar 2021 03:12 AM
Last Updated : 22 Mar 2021 03:12 AM

மாஸ்டர் திட்டம்! :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்துள்ளது. தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. கமல் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தை இயக்கிய பிறகு, விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இதை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதுதொடர்பாக விசாரித்தபோது, ‘மாஸ்டர்’வெளியாவதற்கு முன்பே, மீண்டும் ஒரு படம்இணைந்து பண்ணலாம் என்று விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி முடிவு செய்தது. ஆனால், அதற்கு முன்பே ‘விக்ரம்’ படத்தைஇயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தமாகி விட்டார். ஒருவேளை, ‘விக்ரம்’ தாமதமானால் ‘தளபதி 66’ படத்துக்கு பதிலாக, ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார். இருவரும் மீண்டும் இணைவது உறுதி. எந்த படத்தில் இணைகின்றனர் என்பது ‘விக்ரம்’ படத்தை பொருத்து முடிவாகும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x