Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளில் - 417 வேட்புமனுக்கள் ஏற்பு : 217 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

சென்னை

சென்னை மாவட்டத்தில் உள்ள16 தொகுதிகளில் 417 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 217 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதி வரைநடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் 634 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

கொளத்தூரில் 55 பேர் மனு

அதிகபட்சமாக கொளத்தூர்தொகுதியில் 55, ஆர்.கே.நகர்தொகுதியில் 51, துறைமுகம்தொகுதியில் 50, சைதாப்பேட்டையில் 49 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

வேட்புமனுக்களின் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் என்.ஆர்.தனபாலன், துறைமுகம்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வம்,சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமி உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் மீது திமுகவினர் ஆட்சேபம் தெரிவித்ததால், முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் அவர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

சென்னை மாவட்டத்தில் உள்ள16 தொகுதிகளிலும் 417 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. அதிகபட்சமாக கொளத்தூர் தொகுதியில் 38, துறைமுகம் தொகுதியில் 35,ஆர்.கே.நகர் தொகுதியில் 31,சைதாப்பேட்டையில் 30 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இறுதி வேட்பாளர் பட்டியல்

இம்மாவட்டத்தில் மொத்தம்217 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இன்று (மார்ச் 22) வேட்புமனுக்களை திரும்பப் பெற இறுதி நாளாகும். இன்று மாலை இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x