Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM

பாப்ஸ்கோ நிறுவனம் பல கோடி ரூபாய் பாக்கி : ஆளுநரிடம் வர்த்தகசபை முறையீடு

அரசு நிறுவனமான பாப்ஸ்கோ வணிகர்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தீர்க்குமாறு ஆளுநர் தமிழிசையிடம் வர்த் தக சபை நிர்வாகிகள் மனு அளித் துள்ளனர்.

புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன் மற்றும் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் தரப்பில் கூறியதாவது:

புதுச்சேரி வர்த்தக சபையின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத் தில் முக்கிய முடிவுகள் எடுத் தோம். அதுதொடர்பான மனுவைதுணைநிலை ஆளுநர் தமிழி சையை சந்தித்து தந்தோம். கரோனா காலத்தில் வணிகம் சரிவை சந்தித்துள்ளதால் தொழில் வரி, குப்பை வரி உட்பட அனைத்துவரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள போக்குவரத்து நெரிசல்பிரச்சினையை சரி செய்ய வேண் டும். புதிய பேருந்து நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். அரசு நிறுவனமான பாப்ஸ்கோபல வணிகர்களிடம் சரக்குகளை வாங்கி பல ஆண்டுகளாக பலகோடி ரூபாய் பாக்கி வைத்துள் ளனர்.

அதை தராமல் இருக்கும் பாதிப்பை ஆளுநர் தீர்க்க வேண்டும். புதுச்சேரி நகரமைப்பு குழுமம் (பிபிஏ) மனைகள் அனுமதி பெறுவது, வீடுகள், வணிக கட்டிட அனுமதி பெறுவது கடினமாகவும், காலதாமதம் ஏற்படுவதால் கட்டுமான தொழில் நிறுவனங்கள், கட்டுமான பொருட்கள் விற் பனை நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. புதுச்சேரி வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இவ்விஷயத் தில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

ஆளுநர் இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.

அரசு நிறுவனமான பாப்ஸ்கோ பல வணிகர்களிடம் சரக்குகளை வாங்கி பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள் ளனர். அதை தராமல் இருக்கும் பாதிப்பை ஆளுநர் தீர்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x