Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

மாநில கைப்பந்து போட்டி: எஸ்ஆர்எம் பல்கலை. அணி வெற்றி :

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 27-வது ஆண்டு என்.முத்தையா அம்பலம் நினைவு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இதில், சென்னை, கோவை, திருச்சி, சிவகாசி, காந்தி கிராமம் மற்றும் மதுரையைச் சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. முதல் இடத்தை சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியும், இரண்டாம் இடத்தை பொள்ளாச்சி எஸ்டிசி கலைக் கல்லூரி அணியும் பெற்றன.

பரிசளிப்பு விழாவுக்கு அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.

காவல்துறை துணை ஆணையர் எம்.பாஸ்கரன், வெற்றிபெற்ற அணியினருக்கு ரொக்கப் பரிசுகளையும், கோப் பைகளையும் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x