Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

சூலூர், கோவை வடக்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் :

கோவை

கோவை வடக்கு, சூலூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிகளில் அமமுக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் உட்பட 42 வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

சூலூர் தொகுதியில் கொமதேக மாற்று வேட்பாளரான நித்தியானந்தம், வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வி.சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதேபோல, அமமுக மாற்று வேட்பாளர் மல்லிகா தேவி, புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் சங்கர் குரு, சுயேச்சை வேட்பாளர் ஜெகதீஷ், நாகராஜ், பிரேம்குமார், கந்தசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் அமமுக, நாம் தமிழர் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் ஆகியோர் மொத்தம் 11 வேட்புமனுக்களை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜி.ரவிச்சந்திரனிடம் தாக்கல் செய்தனர். இதேபோல, கோவை வடக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் 11 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கிணத்துக்கடவு தொகுதியில், முக்கியக் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்டோர் 13 வேட்புமனுக்களை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.அம்சவேணியிடம் தாக்கல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x