Published : 18 Mar 2021 03:13 AM
Last Updated : 18 Mar 2021 03:13 AM

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும்

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். மாலை முதல் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக் காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள்.மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும். பணவரவு திருப்தி தரும்.சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி நடந்து கொள்ள வேண்டாம். மாலை முதல் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். எதிலும் நிதானம் அவசியம். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாயாரின் ஆதரவும் கிடைக்கும்.மகரம்: குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்று வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைக்கு தீர்வுகாண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விலகி இருந்த சொந்தங்கள் தேடி வருவார்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x