Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM

இந்திய கம்யூ. வேட்பாளர் பட்டியல் வெளியீடு :

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பவானி சாகர், தளி, திருத்துறைப்பூண்டி, சிவகங்கை, வால்பாறை, திருப்பூர் வடக்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான மாநிலக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லகண்ணு உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் வேட்பாளர் பட்டியலை மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டார். அதன்விவரம்; திருத்துறைப்பூண்டி(தனி) - க.மாரிமுத்து, திருப்பூர் வடக்கு - ரவி எம்.சுப்ரமணியம், தளி-டி.ராமசந்திரன், பவானிசாகர் (தனி)-பி.எல்.சுந்தரம், வால்பாறை (தனி) -எம்.ஆறுமுகம், சிவகங்கை-எஸ்.குணசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.

அதைத்தொடர்ந்து முத்தரசன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும் வெற்றியை பெறும். மேலும், எங்களுக்கும் இந்த தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சாதி, மத, இனங்களை பயன்படுத்தி பாஜக அரசியல் செய்து வருகிறது. அத்தகைய வகுப்புவாத சக்தியை தமிழகத்தில் பலம் பெற விடக்கூடாது. அதேபோல், தேர்தல் ஜனநாயக முறையில் நேர்மையாக நடைபெற, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x