Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

புதுச்சேரி தேமுதிக வேட்பாளர்2-வது பட்டியல் வெளியீடு :

புதுச்சேரியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 2-வது கட்டமாக 16 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்து, கடந்த 11-ம் தேதி முதல்கட்டமாக 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்தது.

இதற்கிடையே, 2-வது கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக நேற்று அறிவித்தது.

மண்ணாடிப்பட்டு - எஸ்.மணிகண்டன், திருபுவனை (தனி) - விநாயகமூர்த்தி, மங்களம் - ச.பச்சையப்பன், வில்லியனூர் - ஏ.பாசில், உழவர்கரை - எழில்பேர், கதிர்காமம் - எஸ்.மோட்சராஜன், காமராஜ்நகர் - நா.நடராஜன், முத்தியால்பேட்டை - அ.அருணகிரி, உருளையன்பேட்டை - ஆர்.கதிரேசன், நெல்லித்தோப்பு - அ.பூவராகவன், அரியாங்குப்பம் - ஏ.லூர்துசாமி, மணவெளி -வீ.திருநாவுக்கரசு, நெட்டப்பாக்கம் - கே.முருகவேல், காரைக்கால் வடக்கு - அ.வேலுச்சாமி, காரைக்கால் தெற்கு - ஆர்.ஜெகதீசன், நிரவிதிருபட்டினம் - ஆ.அருள்ராஜி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, வேட்பாளர்கள் அனைவரும் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தேமுதிக பொருளார் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x