Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிடும் 70 வேட்பாளர்கள் அறிவிப்பு : கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி இடம்பெறவில்லை :

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பட்டியலை வெளியிட்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். படம்: பு.க.பிரவீன்

சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 70 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.

மக்கள் நீதி மையம் கூட்டணியில் உள்ளசமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயககட்சி ஆகியவற்றுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம்போட்டியிடுவதாக ஏற்கெனவே கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இக்கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியும் இணைந்துள்ளது. அக்கட்சிக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பா பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் நேற்று நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பங்கேற்று முதல்கட்டமாக 70 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். அதன்படி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு வில்லிவாக்கம் தொகுதியிலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அண்ணாநகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ள தொகுதியை அவர் அறிவிக்கவில்லை.

அது தொடர்பாக கேள்வி எழுப்ப முயன்றசெய்தியாளர்களுக்கு பதில் அளிக்கவும் மறுத்துவிட்டார். அதே நேரத்தில் ஆலந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்தொகுதிக்கு இன்னும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் முதல்கட்ட அறிவிப்பில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது: தமிழுக்கு பல நாட்களாக நாங்கள் மட்டுமே காவலர்கள் என்று கூறிக்கொண்டு, சமூக நீதி என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கட்சி ஒரு பக்கம். அவர்களை குற்றம்சாட்டி, இது வாரிசு அரசியல், அதற்கு நாங்கள் எதிரானவர்கள். அதனால் எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என கேட்கும் அதிமுக இன்னொரு பக்கம். இவர்கள் யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் இருவரையும் அகற்றுவது தான் முதல் வேலை. நாங்கள் அவர்களை விட வயதில் சிறியவர்கள். நமது வேட்பாளர்கள் தேர்தல் முடிந்ததும் ஓய்வெடுக்க செல்பவர்கள் இல்லை. அடுத்த தேர்தலுக்காக தயாராகக்கூடியவர்கள். பெண்களுக்கு நிதி கொடுப்பது தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறியபோது, பலர் அதை எதிர்த்து கேள்வி எழுப்பினர். இன்று எனது அறிவிப்பை அரசியல் கட்சிகள் எனது கண்டுபிடிப்பு என அறிவித்து வருகின்றன. தற்போது 70 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்திருக்கிறேன். இவர்கள் வெற்றபெற்ற பின், அந்த பட்டியலையும் வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரவாயல்- பத்மபிரியா, மாதவரம்- ரமேஷ் கொண்டலசாமி, ஆர்.கே.நகர்- ஃபாசில், பெரம்பூர்- பொன்னுசாமி, வில்லிவாக்கம்- சந்தோஷ்பாபு, எழும்பூர்- பிரியதர்ஷினி, அண்ணாநகர் - பொன்ராஜ், விருகம்பாக்கம் - சினேகன், சைதாப்பேட்டை- ஸ்நேஹா மோகன்தாஸ், பல்லாவரம்- செந்தில் ஆறுமுகம், தாம்பரம்- சிவ இளங்கோ,திருப்போரூர்- லாவன்யா, காஞ்சிபுரம்- கோபிநாத், ஓசூர்- மசூத், பாலக்கோடு- ராஜசேகர், பென்னாகரம்- கே.சகிலா, திருவண்ணாமலை- அருள், செய்யார் - மயில்வாகனன்,ஓமலூர்- வி.சீனிவாசன், மேட்டூர்- அனுசியா, நாமக்கல்- ஆதாம் ஃபரூக், குமாரபாளையம்-காமராஜ், ஈரோடு கிழக்கு- ஏ.எம்.ஆர்.ராஜ்குமார், ஈரோடு மேற்கு-துரை சேவுகன், மொடக்குறிச்சி- ஆனந்தம் ராஜேஷ், பெருந்துறை - சி.கே.நந்தகுமார், உதகமண்டலம் -டாக்டர் சுரேஷ் பாபு, குன்னூர் - எச்.பி.ராஜ்குமார், கூடலூர்- பாபு.ஜெ, மேட்டுப்பாளையம்- கே.லட்சுமி, அவிநாசி (தனி) - டாக்டர் ஏ.வெங்கடேஸ்வரன், திருப்பூர் வடக்கு - சிவபாலன், திருப்பூர் தெற்கு- அனுஷ்யா ரவி, பல்லடம்- மயில்சாமி, சூலூர்- ரெங்கநாதன், கிணத்துக்கடவு - ஏ.சிவா

வால்பாறை (தனி)- டி.செந்தில்ராஜ், மடத்துக்குளம்- கே.குமரேசன், பழனி- பி.பூவேந்தன், திண்டுக்கல் - ராஜேந்திரன்

அரவக்குறிச்சி - முகமது அனீஃப் ஷஹீல், திருச்சி கிழக்கு - டி.வீரசக்தி, திருவெறும்பூர் - முருகானந்தம், முசிறி - டாக்டர் கோகுல், துறையூர் (தனி) - யுவராஜ், குன்னம் -சாதிக் பாட்ஷா, பண்ருட்டி - ஜெயலானி, மயிலாடுதுறை - ரவிச்சந்திரன், நாகப்பட்டினம் - அனாஸ்,

கீழ்வேளூர் - டாக்டர் சித்து.ஜி, பட்டுக்கோட்டை - டாக்டர் சதாசிவம், விராலிமலை - சரவணன் ராமதாஸ் புதுக்கோட்டை - எஸ்.மூர்த்தி, திருமயம் - ஆர்.திருமேனி, ஆலங்குடி - வைரவன், காரைக்குடி- ராஜ்குமார், மேலூர் - கதிரேசன், சோழவந்தான் - யோகநாதன், மதுரை மேற்கு - முனியசாமி, திருமங்கலம் - ராம்குமார், ஆண்டிப்பட்டி- குணசேகரன்.எஸ்., போடிநாயக்கனூர் - கணேஷ்குமார், கம்பம் - வேத வெங்கடேஷ், திருவில்லிப்புத்தூர் - குருவய்யா

அருப்புக்கோட்டை - உமாதேவி, பரமக்குடி (தனி) - கருப்பு ராஜ்.எம்., கோவில்பட்டி - ஜி.கதிரவன், கன்னியாகுமரி - பி.டி.செல்வகுமார், நாகர்கோவில் - மரிய ஜேக்கப் ஸ்டான்லி, குளச்சல் - லத்தீஷ் மேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x