திமுகவை குற்றம் சொல்லி பலனில்லை : ப.சிதம்பரம் கருத்து

திமுகவை குற்றம் சொல்லி பலனில்லை :  ப.சிதம்பரம் கருத்து
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவை குற்றம் சொல்லிப் பலனில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி கீழச்சிவல்பட்டியில் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கூட்டணியில் காங்கிரஸூக்கு இந்தத் தேர்தலில் கடந்த முறையைவிட குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு திமுகவை குற்றம் சொல்லிப் பலனில்லை. 2011 தேர்தலில் நமக்கு 63 தொகுதிகளை ஒதுக்கியதில் 5 மட்டுமே வென்றோம். 2016-ல் 40 ஒதுக்கியதில் 8 மட்டுமே வெற்றி பெற்றோம். இதனால் காங்கிரஸூக்கு அதிக தொகுதி வழங்கினால் வெற்றி பெறுவார்களா என்ற கவலை திமுகவுக்குத் தோன்றியது.

தமிழகம் முழுவதும் வெற்றி பெறுவதை வைத்துத்தான் கூட்டணிக் கட்சிகளின் பலத்தைக் கணிப்பார்கள். வெற்றி பெற வேண்டுமென்றால் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். குறிக்கோள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். குறியே இல்லாமல் அம்பு எய்தால் எங்கே போய் பாயும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in