Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

பாக். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி :

இம்ரான் கான்

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தேசிய அவையில் 342 இடங்களும் செனட் அவையில் 104 இடங்களும் உள்ளன. கடந்த 3-ம் தேதி செனட் அவையின் 37 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சிக்கு தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றின.

இதனால் ஆளும் கூட்டணியின் பலம் 47 ஆகக் குறைந்தது. குறிப்பாக, நிதியமைச்சர்அப்துல் ஹபீஸ் ஷேக் செனட் தேர்தலில் தோல்வியை தழுவினார்.

இதனால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து தனது அரசின் பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று இம்ரான் கான் அறிவித்தார்.

இதன்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அவையின் 342 இடங்களில் ஓரிடம் காலியாக உள்ளது. மீதமுள்ள 341 உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 171 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு ஆதரவாக 178 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆளும் பிடிஐ கட்சிக்கு அவையில் 156 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும் அரசுக்கு ஆதர வாக வாக்களித்தனர். எதிர்க்கட்சி கூட்டணி வாக் கெடுப்பை புறக்கணித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x