Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் - மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப நீதிபதிகள் உத்தரவு

உயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் மேல்முறையீட்டு மனுக்கள் மீது முடிவெடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய போக்குவரத்து காவலர் குமரன் என்பவர் துறை ரீதியிலான விசாரணைக்குப் பின் கடந்த 2009-ம்ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து குமரன்,சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மேல்முறையீட்டு மனு தற்போது வரை நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கொலை முயற்சி வழக்கில் குமரன் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் கடந்த 2019-ல் மீண்டும் காவல்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்துள்ளார். தனது மேல்முறையீட்டு மனுக்களைபரிசீலிக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக்கோரி குமரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.வைத்யநாதன் முன்பாக நடந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின்மேல்முறையீட்டு மனுவை 2 மாதங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும் பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளின்படி கோரிக்கை மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள் மீது அதிகாரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்காததால், ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல பல கொடூர குற்ற வழக்குகளிலும் கூட குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

எனவே உயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் கோரிக்கைமனுக்கள், மேல் முறையீட்டு மனுக்கள் மீது முடிவெடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக தலைமைச் செயலர் மற்றும்காவல்துறை டிஜிபி ஆகியோர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு தாம் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து குமரன்,சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மேல்முறையீட்டு மனு தற்போது வரை நிலுவையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x