Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் விஐடி :

வேலூர்: விஐடி பல்கலைக்கழகம் இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘இந்திய அளவில் சிறந்த 12 கல்வி நிறுவனங்களின் பட்டியலை 'க்யூஎஸ்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பிரிவில் விஐடி பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. மேலும், உலகின் சிறந்த 450 பல்கலைக்கழகங்களுக்குள் விஐடி பல்கலைக்கழகமும் இடம்பெற்றுள்ளது. விஐடி பல்கலைக்கழகத்தின் 7 பாடப்பிரிவுகள் 'க்யூஎஸ்' பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

விஐடியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப் பிரிவுகளின் தரவரிசை பட்டியல் இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உலக அளவில் முதல் 300 இடங்களுக்குள் உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் உலக அளவில் முதல் 400 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.

அதேபோல், விஐடி பல்கலைக்கழகத்தின் கணிதவியல் மற்றும் உயிரி அறிவியல் பாடப்பிரிவுகள் முதன் முதலாக 'க்யூஎஸ்' தரவரிசை பட்டியலில் 500 முதல் 600 இடங்களுக்குள் உலகளவில் இடம்பெற்றுள்ளன. 'க்யூஎஸ்' தர வரிசை பட்டியலின் அடிப்படையில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடப்பிரிவு உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருப்பதை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வழிவகுக்கிறது’’ என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x