Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

திண்டுக்கல் தடகள சங்க செயலர் தேர்வு :

திண்டுக்கல் மாவட்டத் தடகள சங்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் புதிய செயலாளராக என்.பி.ஆர். கல்வி குழும முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட தடகள சங்கச் செயலாளர் உஸ்மான் அலி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தடகளச் சங்க முன்னாள் செயலாளர் ராஜகோபால துரைராஜா முன்னிலை வகித்தார்புதிய செயலாளராக பொறுப்பேற்ற சிவக்குமார் பேசுகையில், மாவட்டத்தில் சிறந்த வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளித்து, மாநிலப் போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில்,மாவட்டக் கால்பந்துக் கழகச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, மாவட்ட விளையாட்டு முன்னாள் அலுவலர் சவுந்திரபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x