Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்குமழை பெய்ய வாய்ப்பு :

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.கீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரளாவை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் தாக்கத்தால் 7, 8, 9 தேதிகளில் தமிழக தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலைநிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் தெளிவாக காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

5-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தி, பாளையங்கோட்டையில் 96 டிகிரி, சேலம், நாமக்கல், மதுரையில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x