Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

பேராவூரணி பகுதி கொள்முதல் நிலையங்களில் - இயக்கம் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேக்கம் : லாரிகள் பற்றாக்குறையால் கொள்முதல் பணிகளில் சுணக்கம்

பேராவூரணி பகுதியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய் யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் பற்றாக்குறையால் இயக்கம் செய் யப்படாமல் தேங்கியுள்ளன. இதனால், விவசாயிகளிடம் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்ய பணியாளர்கள் தயக்கம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி, சேதுபாவாசத்திரம் மற் றும் சுற்றுவட்டார பகுதிகளில் 9,840 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் தற் போது அறுவடைப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், நெல் கொள்முதல் செய்வதற்காக பேராவூரணி, பூக்கொல்லை, பழைய பேராவூரணி, முடச்சிக் காடு, சொர்ணக்காடு, ரெட்டவயல், குருவிக்கரம்பை உட்பட இப்பகு தியில் 26 இடங்களில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வ தற்கு, நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் தற் போது மறுத்து வருவதாகக் கூறப் படுகிறது. இதனால், கொள்முதல் நிலையங்களிலேயே விவசாயிகள் இரவு பகலாக காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி குருவிக் கரம்பை ஆர்.எஸ்.வேலுச்சாமி கூறியதாவது:

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், பேராவூரணி வட்டாட்சியர் அலு வலகம் எதிரே உள்ள திறந்தவெளி நெல் கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அங்கு நெல்லை சேமித்து வைக்க போதிய இடம் இல்லை எனத் தெரிகிறது.

மேலும், நெல்லை ஏற்றிச் செல்ல 22 லாரிகள் மட்டும் இயக்கப்படுகின்றன. எனவே, சுமைப்பணி தொழிலாளர்கள், லாரிகள் பற்றாக்குறையால், ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூட்டைகள் வரை தேங்கிக் கிடக்கின்றன. இதைத் தொடர்ந்து, இடப்பற்றாக்குறை மற்றும் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள், தற்போதுள்ள கடும் வெயில் காரணமாக காய்ந்து, எடைக்குறைவு ஏற்படும் நிலை போன்றவற்றால் கொள்முதல் நிலைய பணியாளர்கள் நெல்லை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலேயே தினமும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறியது:

ஒவ்வொரு கொள்முதல் நிலை யத்திலும், தினமும் 600 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப் படுகிறது. லாரிகள் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய முடியவில்லை. மேலும், போதிய இடம் இல்லாததாலும், கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள நெல், தற்போதுள்ள கடும் வெயில் காரணமாக எடைக்குறைவு ஏற்பட்டால் அபரா தம் கட்ட வேண்டும் என்பதாலும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதை குறைத்து வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x