Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.376 குறைவு :

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்து வருவதால் சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.376 குறைந்து ரூ.33,736-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பல்வேறு தொழில்கள் மீண்டும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இதனால், தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளது. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை ஒரு பவுன்ரூ.34 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.376 குறைந்து ரூ.33,736-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம்தங்கம் ரூ.4,217-க்கு விற்பனையானது. இதுவே, நேற்று முன் தினம் ஒரு கிராம் ரூ.4,264-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x