Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் : தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு தொழிலாளர் துறை அறிவுறுத்தல்

தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் துறை செயலர் முகமது நசிமுத்தீன் தலைமையில் தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் எம்.வி.செந்தில்குமார், சிறப்பு பணி அலுவலர் கே.ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னை

தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை வளர்ப்பது தொழிற்சாலை நிர்வாகத்தின் முக்கிய கடமை என்று தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் மார்ச் 4-ம் தேதி தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தஆண்டு 50-வது தொழிலாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் துறை செயலர் நசிமுத்தீன் தலைமையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்கள், தேசிய பாதுகாப்பு குழுமத்தின் உறுப்பினர்கள் மற்றும் இதர அலுவலர்களுடன் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொழில் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதுவகையான இயந்திரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தொழிலாளர்கள் விபத்துகள் இன்றி மேலும் பாதுகாப்புடன் பணிபுரிவது அவசியமாகும். இந்நிலையில் தொழிலாளர்கள் மத்தியில் பாதுகாப்பு விழிப்புணர்வை வளர்ப்பதுநிர்வாகத்தின் முக்கிய கடமையாகும்.தொழிலாளர்கள் மேம்பாட்டுக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிலாளர் நலன் சார்ந்து அவர்கள் வாழ்க்கை உயர தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துகளை குறைத்தமற்றும் விபத்துகள் இன்றி செயல்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு மாநில அளவில் பாதுகாப்புவிருதுகள், பாதுகாப்பு மேம்பாடு,உற்பத்தித் திறன் மற்றும் தர மேம்பாடு குறித்த சீரிய ஆலோசனைகளை கூறும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் ‘உயர்ந்த உழைப்பாளர் விருது’களும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இ்வவாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x