Published : 05 Mar 2021 03:15 am

Updated : 05 Mar 2021 03:15 am

 

Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

தனி வாரியம் அமைக்க மக்களவையில் வலியுறுத்த வேண்டும் : சீதாராம் யெச்சூரியிடம் குறுந் தொழில் துறையினர் கோரிக்கை

கோவை

குறுந் தொழில்களுக்கென தனி வாரியம் அமைக்க மக்களவையில் எம்.பி.க்கள் மூலமாக வலியுறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியிடம் தொழில் துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்த சீதாராம் யெச்சூரி, கோவையைச் சேர்ந்த தொழில் துறையினருடன் கலந்துரையாடினார். அப்போது, தொழில் துறை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டன.


குறுந் தொழில்முனைவோர் சார்பில் டேக்ட் அமைப்பு தலைவர் ஜே.ஜேம்ஸ் அளித்த மனுவில், "பண மதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டி, கரோனா பாதிப்பு ஆகியவற்றால் சிறு, குறுந்தொழில்கள் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்பிலிருந்து மீள, எங்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. மத்திய அரசு வழங்கியகடன் திட்டத்தில், வங்கிகளில் ஏற்கெனவேகடன் வாங்கியவர்களே பயனடைந்தனர். குறுந் தொழில்முனைவோருக்கென எந்த திட்டமும் இல்லை.இதுபோன்ற காரணங் களால், குறுந் தொழில்முனைவோர் தவித்து வருகிறோம். சிறு, குறுந் தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைக் காக்க, சிறு, குறுந் தொழில்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கவும், குறுந் தொழில்களுக்கென தனி வாரியம் அமைக்கவும் எம்.பி.க்கள் மூலமாக மக்களவையில் வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x