Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க வேண்டும் - அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் : சசிகலா அறிவிப்புஜெ.வின் தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்

சிறையில் இருந்து விடுதலையான சசி கலா தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என அறிவித்திருந்த நிலையில், அரசிய லில் இருந்து ஒதுங்குவதாக திடீரென நேற்றிரவு அறிவித்தார். திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து, அதிமுக ஆட்சி தொடர அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிந்து கடந்த ஜனவரி 27-ம் தேதி விடுதலையானார். ஆனால், அவருக்கு கரோனா பாதிப்பு இருந்ததால், பெங்களூருவிலேயே தங்கியிருந்தார். அதன்பின், கடந்த பிப். 8-ம் தேதி சென்னை திரும்பினார்.

அதிமுக கொடியை சசிகலா தனது வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. ஆனா லும், அதிமுக நிர்வாகி ஒருவரின் கட்சிக் கொடி கட்டிய காரிலேயே பயணித்து சென்னை வந்தார். அவருக்கு அமமுக வினர் வழிநெடுகிலும் வரவேற்பு அளித் தனர் 23 மணி நேர பயணத்துக்கு பிறகு சென்னை வந்தடைந்த அவர், தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியிருந்தார்.

பெங்களூருவில் இருந்து வந்த போது கர்நாடக - தமிழக எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். கடந்த 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில், அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, விரைவில் தொண்டர்களையும் மக்களையும் சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ‘சட்டப்பேரவை தேர்தலை சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை இணைத்தே சந்திக்க வேண்டும். அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும்' என்று பாஜக தரப்பில் வலியுறுத்துவதாகவும் கருத்து கள் வெளியாகின. இந்நிலையில், சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

நான் என்றும் வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க அவர் கூறியபடி, இன்னும் நூறாண்டுகளுக்கும் மேலாக தமிழகத் தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வின் பொற்கால ஆட்சி தொடர வேண் டும். அதற்கு ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து, விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண் டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எப்படி அவர் எண் ணத்தை செயல்படுத்தும் சகோதரி யாக இருந்தேனோ, அவரது மறை வுக்குப் பின்னும் அப்படியேதான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக் காகவோ, பட்டத்துக்காகவோ, அதி காரத்துக்காகவோ ஆசைப்பட்ட தில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா ஜெயலலிதா விடமும், எல்லாம் வல்ல இறைவனிட மும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சோர்வை தருகிறது: தினகரன்

சசிகலாவின் இந்த அறிவிப்பு தனக்கு சோர்வை ஏற்படுத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்றிரவு செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி அவர்களே பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்தனர். போயஸ் கார்டனுக்கு அவர்களே வந்து, அதிக நேரம் மன்றாடி, சசிகலாவை அந்த பதவியை ஏற்க வைத்தனர். அதன்பிறகு, சசிகலாதான் முதல்வராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் அதையும் சசிகலா ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது. சசிகலா சிறைக்கு சென்றார்.

சிறையில் இருந்து வந்தபோது அரசியலில் தீவிரமாக பணியாற்று வேன் என்று சசிகலா கூறினார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினார். அதன் பின்னர் நான் ஒதுங்கி இருந் தால்தான் ஒற்றுமையாவீர்கள் என்று கூறினார். அதிமுகவினர் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதற்காக இந்த முடிவை சசிகலா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கொடுக்க வேண்டாம் என அரை மணி நேரம் அவருடன் பேசிப் பார்த்தேன். ஏன் ஒதுங்கி செய்ய வேண்டும். உடன் இருந்து செய்யுங்கள் என்றேன். இதுதான் எனது முடிவு என சசிகலா அறிவித்துவிட்டார்.

கட்சியை விட்டு நீக்கியதால்தான் நாங்கள் அமமுகவை தொடங்கினோம். அதிமுக இயக்கத்தை மீட்டெடுக்க தானே கட்சியை தொடங்கினோம். எனது தலைமையில்தான் கூட்டணி என தெளிவாக தெரிவித்துவிட்டேன். அந்த கூட்டணி மூலம் திமுக எனும் தீய சக்தியை தோற்கடிப்போம். 10-ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறேன். ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவின் முடிவு குறித்து தலைவர்கள் கூறியதாவது:

கே.பி.முனுசாமி (அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்) ஜெயலலிதா வின் ஆன்மா சாந்தியடையும் வகையில் நல்ல கருத்தை சொல்லியிருப்பது மகிழ்ச்சி. 10 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே, சசிகலா வின் கருத்துகளை தினகரன் கருத்துடன் சேர்க்க வேண்டாம். திமுகவை ஆட் சிக்கு வரவிடாமல் தடுப்பதே ஜெய லலிதாவின் ஆசை. அதை பிரதிபலிக் கும் வகையில் சசிகலாவின் கருத்து உள்ளது. ஜெயலலிதா மீது தீவிர விசு வாசுமாக இருப்பதை வெளிகாட்டிய சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து காலம்தான் முடிவு செய்யும்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங் கிரஸ் தலைவர்): சசிகலா அரசியலில் மிகவும் அனுபவமிக்கவர். ஆனால், ஆளுமை கிடையாது. ஜெயலலிதா வின் பின்னால் இருந்து ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தினார். அவரின் விருப்பத்துக்கு மாறாக பாஜக அவரை கையாள நினைத்தது. சசிகலாவை அதிமுகவுக்குள் திணித்து கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற பாஜகவின் எண்ணம் தற்போது நிறைவேறாமல் போய்விட்டது. அதற்காக அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.

சீனிவாசன் (பாஜக மாநில பொதுச்செயலாளர்): சசிகலாவின் மனசாட்சி வேலை செய்திருக்கிறது. அவர் உள்ளுணர்வுடன் சிந்தித்து, நல்ல முடிவை எடுத்துள்ளார். அவரது இந்த முடிவை நான் பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x