Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

தமிழ்நாடு உருது அகாடமி துணை தலைவராக - முஹம்மத் நயீமுர் ரஹ்மான் நியமனம் :

தமிழக அரசின் உயர்கல்வி துறை சார்பில் தமிழ்நாடு உருது அகாடமி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அகாடமியின் தலைவராக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இருப்பார். துணைத்தலைவராக டாக்டர் முஹம்மத்நயீமுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டாக்டர் எம்ஜிஆர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) இயக்குநராக உள்ளார்.

இவைதவிர முன்னாள் அலுவலக உறுப்பினர்களாக நிதித்துறை செயலாளர், உயர்கல்வித் துறை செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் மற்றும் அகாடமியின் பதிவாளரும், உறுப்பினர்களாக 15பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டார்.

இதுதொடர்பாக அகாடமியின் துணைத் தலைவர் முஹம்மத் நயீமுர் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் உருது மொழி பேசும் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோருக்கு தமிழகத்தில் உருது மொழி பேசும் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x