Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் - மகா சிவராத்திரி கொடியேற்றம் :

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று (மார்ச் 4) காலை 9 மணிக்கு மேல் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றத் துடன் தொடங்குகிறது.

இரவு 8 மணிக்கு சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் புறப்பாடாகி வீதி உலா வருகிறார்கள். மார்ச் 11 காலை 9 மணிக்கு மேல் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 12-ல் காலை 9.30 மணிக்கு சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளு கிறார்கள். தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x