Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

மு

மு.க.ஸ்டாலின்: பத்து ஆண்டுகளில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பெறுவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் மாபெரும் கனவு - இலட்சியப் பிரகடனத்தை மார்ச் 7ல் திருச்சியில் வெளியிடுகிறேன். கழகத்தினர், இப்பிரகடனத்தை 2 கோடி குடும்பங்களுக்கும் கொண்டு சேர்ப்பார்கள். அனைவருக்குமான வளமான தமிழகம் அமைப்போம்!

அதிமுக: திமுக : சீர்கேடான நகரங்கள் ! அதிமுக : ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் !

திருமாவளவன்: திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து விசிக சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம். சமூகநீதியைப் பாதுகாக்கும் அறப்போரில் சனாதனக் கும்பலை வீழ்த்தி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

ஜோதிமணி: டிஜிபிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இடைநீக்கம் செய்யாமல் டிஜிபியை தொடர்ந்து பாதுகாக்கும் எடப்பாடி அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது.வெட்கக்கேடானது. உடனடியாக விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x