Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

மாணவிகளுடன் நடனமாடினார்.. தண்டால் எடுத்தார் குமரியில் ராகுல் காந்தி ஆரவார பிரச்சாரம் சமூக வலைதளங்களில் வைரலானது வீடியோ

சேவை மனப்பான்மையுடன் பணியாற் றும் அரசியல் தலைவர்களை மாணவ, மாணவிகள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தினார். கன்னியாகுமரியில் மாணவிகளுடன் நடனமாடியும் தண் டால் எடுத்தும் அவர் ஆரவாரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 3 நாட்களாக தமி ழகத்தின் தென்மாவட்டங்களில் பிரச் சாரம் மேற்கொண்டார். கன்னியா குமரியில் நேற்று காலை பிரச்சாரத்தை தொடங்கிய அவர், அகஸ்தீஸ்வரத்தில் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மணிமண்டபத்துக்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார். அப்போது ராகுல் பேசும்போது, ``வசந்தகுமார் இறுதிவரை காங்கிரஸின் பக்கமே நின்றார். பின்தங்கிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவியாக இருந் தார். காங்கிரஸின் சக்திவாய்ந்த தலை வரை நாம் இழந்திருக்கிறோம்’’ என்றார். வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, மகன் விஜய் வசந்த் மற்றும் குடும் பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அங்கிருந்து, நாகர்கோவில் வரும் வழியில் மந்தாரம்புதூரில் சாலை யோரக் கடையில் பனை நுங்கு சாப்பிட் டார். நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கருங்கல், களியக்காவிளை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் அவர் பேசிய தாவது:

சிபிஐ, வருமானவரித் துறை மூலம் தமிழக முதல்வரை, பிரதமர் மோடி மிரட்டி வருகிறார். இதனால், பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ, அதை முதல்வர் செய்கிறார். தமிழகத்தில் தமி ழர்களைத் தவிர பிறர் ஆட்சி செய் வதை மக்கள் விரும்ப மாட்டார்கள். தமிழர்களை யார் முன்னிலைப்படுத்துகிறார்களோ, அவர்களே தமிழக முதல்வராக வரவேண்டும்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழு வதுமே காமராஜரின் மதிய உணவு திட் டத்தை பின்பற்றி வருகின்றனர். தமி ழகத்தில் காமராஜரை போன்றவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். லூர்தம்மாள் சைமன், மார்ஷல் நேச மணி போன்றோர் குமரியில் சிறந்த வழிகாட்டியாக இருந்தவர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே ராகுல் கலந்துரையாடினார். அப்போது, ‘‘மாணவர்களின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றுவது ஒரு அரசியல் தலைவரின் கடமை. சேவை மனப் பான்மையுடன் பணியாற்றும் அரசியல் தலைவர்களை மாணவ, மாணவிகள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்’’ என்றார்.

கலந்துரையாடலின்போது மூன்று மாணவிகளை மேடைக்கு அழைத்த ராகுல், அவர்களுடன் கைகோர்த்து நடனமாடினார். ஜூடோவில் மாநில விருது பெற்றிருப்பதாக கூறிய ராகுல், ‘என்னுடன் தண்டால் எடுக்க யாராவது தயாரா’ என கேட்டார். அதை ஏற்று மாணவி ஒருவர் மேடைக்கு வந்தார். அவருடன் போட்டி போட்டு ராகுல் தண் டால் எடுத்தார். மாணவி அதிக நேரம் தண்டால் எடுத்தபோது, ராகுல் உட் கார்ந்துவிட்டார். பின்னர், ஒரு கையால் தண்டால் எடுத்தார். அப்போது, மாண வர்களும், ஆசிரியர்களும் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.

ஒரு மாணவரை அழைத்து, அவரது மணிக்கட்டை லேசாக அழுத்தினார் ராகுல். அந்த மாணவர் சிரித்தபடியே உட்கார்ந்துவிட்டார். பின்னர், அவரை தூக்கிவிட்டு, ஜூடோ குறித்த நுணுக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

ராகுல் காந்தி தண்டால் எடுக்கும் வீடியோவை, மகிளா காங்கிரஸ் அமைப்பு ட்வீட் செய்ய, சமூக வலை தளங்களில் அந்த வீடியோ நேற்று மாலை பலரால் பகிரப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில், தமிழக காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், பொதுச்செயலாளர் சஞ்சய்தத், எம்எல்ஏக்கள் ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர். 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, திருவனந்தபுரம் சென்ற ராகுல், அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x