Published : 02 Mar 2021 03:13 am

Updated : 02 Mar 2021 03:13 am

 

Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

கோவை: கோவை மேற்கு மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட மாநகர், மாவட்ட காவல் துறைகளில் பணியாற்றிவரும் 35 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஆர்.தினகரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகர காவல் துறையில் பணி செய்துவந்த ஆய்வாளர் ரா.கவிதா திருப்பூர் மாநகர காவல் துறைக்கும், எஸ்.பர்வீன் பானு, கே.பி.சாந்தி ஆகியோர் சேலம் மாநகர காவல் துறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கோவை மாநகர காவல் துறையில் 12 ஆய்வாளர்கள், சேலம் மாநகர காவல் துறையில் 8 ஆய்வாளர்கள், சேலம் மாவட்ட காவல் துறையில் 2 ஆய்வாளர்கள், நீலகிரியில் 3 ஆய்வாளர்கள், திருப்பூர் மாநகர காவல் துறையில் 3 ஆய்வாளர்கள், திருப்பூர் மாவட்ட காவல் துறையில் 3 ஆய்வாளர்கள், நாமக்கல் மாவட்டத்தில் 3 ஆய்வாளர்கள், தருமபுரியிலிருந்து ஒரு ஆய்வாளர் என 35 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x