Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் விதிமீறல் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைத்து தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், பெரும்புதூர்(தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி தலைமையில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் கூறும்போது, "24 மணி நேரமும் செயல்படக்கூடி தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக 044-27236205, 27236206, 27236207, 27236208 என்ற தொலைபேசி எண்களும் 18004257087 என்ற இலவச தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான புகார் தெரிவிப்பதற்காக அலுவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆலந்தூர் தொகுதிக்கு பெரும்புதூர் விமான நிலைய விரிவாக்க திட்டம் தனித்துணை ஆட்சியர் எஸ்.சாந்தி (9488470006), பெரும்புதூர் (தனி) தொகுதிக்கு பெரும்புதூர் கோட்டாட்சியர் டி.முத்துமாதவன் (9444964899), உத்திரமேரூர் தொகுதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி(9445000168), காஞ்சிபுரம் தொகுதிக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி(9445000413) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 8,983 பேரும், தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் 2,100 பேரும் ஈடுபட உள்ளனர். தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்கவும் நெறிமுறைகளை பின்பற்றுவதற்காகவும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கு தணிக்கை குழு, உதவி செலவின மேற்பார்வையாளர் குழு, செலவு கண்காணிப்பு பிரிவு குழு, ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உள்ளிட்ட 8 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன" என்றார்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஆட்சியர், "பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பட்டுச் சேலை வாங்குவதற்காக காஞ்சிபுரத்துக்கு வரும் நபர்கள், கையில் வைத்திருக்கும் ரொக்கத்துக்கு உரிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். மேற்கண்ட ஆவணங்கள் இருந்தால் எவ்வித சிரமமும் இன்றி வெளியூர் நபர்கள் பட்டுச்சேலை வாங்கிச் செல்லலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x