Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

திருச்சியில் இன்று கனரா வங்கியின் கடன் மேளா

திருச்சி: கனரா வங்கி சார்பில் கடன் மேளா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள சீனிவாசா அரங்கில் இன்று(மார்ச் 2) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கனரா வங்கியின் மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த கடன் மேளாவில் வீட்டுக்கடன், அடமானக் கடன், கார் கடன் மற்றும் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். உடனடி அனுமதியும் வழங்கப்படும். இதில் மறைமுக கட்டணங்கள் எதுவும் இல்லை.

கடன் தேவைப்படுவோர் இந்த கடன் மேளாவை அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி வில்லியம்ஸ் சாலையில் முத்தையா டவர்ஸ் முதல் தளத்தில் உள்ள கனரா வங்கியின் மண்டல அலுவலகத்தையோ அல்லது 94890 45903, 94890 45922 என்ற செல்போன் எண்களையோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x