Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

ஓய்வுபெற்ற நடத்துநரிடம் ரூ.45 லட்சம், 45 பவுன் மோசடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேருக்கு வலை

கோப்புப்படம்

நாகப்பட்டினம்

நாகையில் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ.45 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்த பெண் உட்பட 9 பேரை போலீஸார் தேடி வரு கின்றனர்.

நாகை பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(61). ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துநர். இவர், அதே பகுதியில் உள்ள விநா யகர் கோயிலை பராமரித்து வருகிறார். இந்தக் கோயிலுக்கு தினமும் வந்துசென்ற நாகை ஆண்டோ சிட்டி பகுதியைச் சேர்ந்த ராம கிருஷ்ணன், அவரது மகள் ராஜேஸ்வரி ஆகியோருக்கும், சுப்பிரமணி யனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்றதில், அந்தப் பணம் வருமான வரித் துறையில் சிக்கிக் கொண்டதாகவும், அதை மீட்க ரூ.45 லட்சம் தேவைப்படுவதாகவும் சுப்பிரமணியனிடம் ராஜேஸ்வரி கூறி யுள்ளார். இதை நம்பிய சுப்பிரமணியன், ரூ.45 லட்சத்தை ராஜேஸ்வரியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், மேலும் ரூ.10 லட்சம் தேவைப்படுவதாக ராஜேஸ்வரி கேட்டதால், தனது மகள் பாரதிக்குச் சொந்தமான 45 பவுன் நகைகளை வாங்கி ராஜேஸ்வரியிடம் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட ராஜேஸ்வரி, பின்னர் சுப்பிரமணியனை நம்பவைப்பதற்காக, வருமான வரித் துறை அதிகாரிகள்போல தன் நண்பரான நாகூர் கீழவாஞ்சூரைச் சேர்ந்த ராகுல் மற்றும் சிலரை சுப்பிரமணியனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில், பல மாதங்களா கியும் பணம் மற்றும் நகைகளை ராஜேஸ்வரி திருப்பித் தராததால் சந்தேகமடைந்த சுப்பிரமணியன், இதுதொடர்பாக நாகை எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனாவிடம் அண்மையில் புகார் அளித்தார். அதன்பேரில், நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீ ஸார் நடத்திய விசாரணையில், ராஜேஸ்வரி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, நாகை குற்றப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட ராஜேஸ்வரி, அவரது தந்தை ராமகிருஷ்ணன், தாய் சாந்தா, சகோதரி நந்தினி, நண்பர் ராகுல், உறவினர் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன், நாகை சிவன் வடக்கு தெருவைச் சேர்ந்த வெங்கடபாலாஜி, நாகை சின்ன மருத்துவமனை சாலையைச் சேர்ந்த ராமு, நாகை சிவன் வடக்கு வீதியைச் சேர்ந்த ராஜா ஆகிய 9 பேரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x