Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

சென்னையில்பிரெஞ்சு நிறுவனகார் விற்பனையகம்

நூற்றாண்டு பாரம்பரியமிக்க பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ‘சிட்ரோயன்’, இந்தியாவில் அதன் முதல் விற்பனையகத்தை சென்னையில் நேற்று திறந்தது.

சென்னை அண்ணா சாலையில் திறக்கப்பட்டுள்ள அந்தஷோரூமுக்கு ‘லா மேசன் சிட்ரோயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் களுக்கு நேரடி அனுபவத்தோடு, டிஜிட்டல் அனுபவத்தையும் வழங்கிடும் வகையில் இந்தவிற்பனையகம் வடிவமைக் கப்பட்டுள்ளது.

சிட்ரோயன் இந்தியாவில் அதன் முதல் விற்பனையகத்தைத் திறந்துள்ள நிலையில், அதன் புதிய தயாரிப்பான ‘சிட்ரோய்ன் சி5 ஏர்கிளாஸ் எஸ்யூவி’ விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதற்கான முன்பதிவு மார்ச் 1 முதல் தொடங்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x