Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக் காளர் சுருக்கத் திருத்தம்-2021 அடிப் படையிலான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜன.20-ல் வெளியிடப்பட்டது. 5,76,343 ஆண் வாக்காளர்கள், 5,81,132 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,57,540 வாக்காளர்கள் உள்ளனர்.

3,276 வாக்குச் செலுத்தும் இயந்திரங் கள் (Ballot Unit), 2,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Control Unit), 2,302 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரங்கள் (VVPAT) முதல் நிலை சரிபார்த்தல் நடத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் மாவட்டத்தில் 1,369 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கூடுதலாக 278 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை மொத்தம் 1,647 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு அலு வலகங்களில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் அரசுத் திட் டங்கள் தொடர்பான விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அரசு கட்டிடங்கள், சாலை, மேம்பாலங்கள், பொது இடங் களில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்களை அகற்ற நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகி றது.

புதிய திட்டப்பணிகளை செயல்படுத்து தல், நிர்வாக அனுமதி வழங்குதல், ஒப்பந்தப்புள்ளி கோருதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x