Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடக்கம்

சட்டப்பேரவையில் கடந்த 23-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தை பிப்.25 முதல் 27-ம் தேதிவரை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியது.

அப்போது, கடந்த 10-ம் தேதி மறைந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார், விருதுநகர் மாவட்டம் அச்சங்குளம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் கடந்த7-ம் தேதி உத்தராகண்டில் பனிப்பாறைஉடைந்ததால் அலக்நந்தா, தவுலிகங்காநதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுஉயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானங்களை பேரவைத் தலைவர் பி.தனபால் வாசித்தார். பிறகு, உறுப்பினர்கள் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x