Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

சூரத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி

குஜராத்தில் 576 உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தல் கடந்தஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக 483 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 55 இடங்களில் மட்டுமே வென்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.

குஜராத் தேர்தலில் முதல் முறை போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, சூரத் மாநகராட்சியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவாகி யுள்ளது. காங்கிரஸ் கட்சி இங்கு இம்முறை ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

இதுகுறித்து கட்சித் ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் கூறும்போது, ‘‘குஜராத்தில் புதிய அரசியலுக்கான தொடக்கமாக தேர்தல் வெற்றி இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x