Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி

தமிழகத்தில் 3,167 கி.மீ. சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கும், 3,220 கி.மீ. நீளமுள்ள சாலைகளின் ஓடுதளப் பாதை தரத்தை மேம்படுத்தும் பணிகளுக்கும், 706 பாலங்கள் மற்றும் சிறுபாலங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கும் 2020-21-ம் ஆண்டில் ரூ.5,300 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் திருத்த மதிப்பீடுகளில் இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.6,023 கோடியே 11 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்துக்காக ரூ.1,274 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 பகுதிகள் கொண்ட 133.87 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டம் ரூ.12,301 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்காக ரூ.2,248 கோடியே 62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறைக்காக திருத்த மதிப்பீடுகளில் ரூ.16,316 கோடியும், இடைக்கால பட்ஜெட்டில் ரூ.18,750 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x