Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

ஊரக வளர்ச்சித் துறை காலிப்பணியிடம் 1,200 பேர் திரண்டதால் பரபரப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாளில் நேற்று பல்வேறு உதவிகள் கோரி, 490 மனுக்கள் பெறப்பட்டன.

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 490 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

சான்றிதழ் சரிபார்ப்பு

குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் போன்ற 11 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்கு, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம், அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, தோவாளை, ராஜாக்கமங்கலம், தக்கலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. நாகர்கோவிலில் மட்டும் 1,200 பேர் திரண்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலையில் இருந்து மாலை வரை விண்ணப்பதாரர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x