Published : 22 Feb 2021 03:16 AM
Last Updated : 22 Feb 2021 03:16 AM

ஆஸ்திரேலிய ஓபன் ஜோகோவிச் சாம்பியன்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் போட்டியான, ஆஸ்திரேலிய ஓபன் கடந்த 8-ம்தேதி மெல்பர்ன் நகரில் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 4-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மேத்வதேவும் மோதினர்.

இதில் ஜோகோவிச் 7-5, 6-2, 6-2என்ற நேர் செட்களில் மேத்வதேவை வீழ்த்தினார். 33 வயதாகும் ஜோகோவிச் இந்த வெற்றியின் மூலம் 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபனில் ஒரு முறையும், விம்பிள்டனில் 5 முறையும், அமெரிக்க ஓபனில் 3 முறையும் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார்.

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் பட்டியலில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். இருவரும் தலா 20 கிராண்ட்ஸ்லாம்பட்டங்களைக் கைப்பற்றியுள்ள னர். ஜோகோவிச் 18 பட்டங்களுடன் 3-வது இடத்திலும், அமெரிக்க முன்னாள் வீரர் பீட் சாம்ப்ராஸ் 14 பட்டங்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் அதிக முறை பட்டம் வென்றவர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ராய் எமர்சன் 6 பட்டங்களுடன் உள்ளார்.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிஹைதராபாத்-ஏடிகே மோகன் பகான்

நேரம்: இரவு 7.30

இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x