Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

ரூட்செட் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மதுரை ரூட்செட் பயிற்சி நிலைய இயக்குநர் ம.ரவிக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரை ரூட்செட் பயிற்சி நிலையத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழிலை முன்னேற்றும் நோக்கத்துடன் இலவசமாக துரித உணவுகள் தயாரிக்கும் 10 நாட்கள் பயிற்சி பிப்.22 முதல் நடைபெறுகிறது.

அதேபோல், சிசிடிவி கேமரா பழுது பார்த்தல் பயிற்சி (13 நாள்) பிப். 24ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கு 18 முதல் 45 வயதுடைய ஆண்கள், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி்றன. காலை 9.30 முதல் 5.30 மணி வரை நடைபெறும் இலவசப் பயிற்சிக்கு உணவு, தங்குமிடம் இலவசம்.

இதற்கான விண்ணப்பங்களை இயக்குநர், ரூட்செட் பயிற்சி நிலையம், விமான நிலையம் அருகில், பெருங்குடி, மதுரை 625 022. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், மேலும் விவரங்களுக்கு 94456 00563, 94456 00561 - 0452 2690609 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x