Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் முடிவு

கோரிக்கைகளை தமிழக ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடர்வது என்று தமிழ்நாடு வருவாய்த் துறை அலு வலர் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருச்சியில் அந்தச் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.குமரேசன் செய்தியாளர்களிடம் கூறியது:

எங்களது 10 அம்சக் கோரிக் கைகளில் 7 கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு 2 அரசாணைகள் வழங் கிய முதல்வர், வருவாய்த் துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுக்கு நன்றி. பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, நிலுவையில் உள்ள அரசாணைகளை அரசு உடனே வழங்க வேண்டும்.

மேலும், 10 அம்சக் கோரிக்கை யில் நிலுவையில் உள்ள, அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு மேம்படுத் தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும்.

துணை வட்டாட்சியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் ரூ.1,300, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.9,300, இணையான ஆரம்ப ஊதியம் ரூ.36,900 மற்றும் அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோருக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் ஏற்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்புகளை உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

நிலுவையில் உள்ள அரசாணைகள் மற்றும் எஞ்சிய கோரிக்கைகளை ஏற்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் விரும்பி ஈடுபடவில்லை. பிற துறைகளைக் காட்டிலும் வருவாய்த் துறையினருக்கு பணிகள் அதிகம். வருவாய்த் துறை யின் 166 பணிகள் மட்டுமின்றி, அரசின் சிறப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஓரிரு நாட்களில் அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தால், வேலைநிறுத்தத்தால் 5 நாட்களாக தேங்கியுள்ள அனைத் துப் பணிகளையும் தினமும் 18 மணி நேரம்கூட பணியாற்றி முடித்துவிடுவோம்.

எங்களது முக்கிய கோரிக் கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால், அரசு ஊழியர்களின் குடும்பங் களைச் சேர்ந்த ஒன்றரை கோடி வாக்காளர்கள் தமிழக அரசுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என்றார்.

சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ச.பிரகாஷ், தீ.கலைச் செழியன், சு.சண்முகவேலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x