Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

திமுக தேர்தல் பிரச்சார சைக்கிள் பேரணி

தூத்துக்குடியில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சார சைக்கிள் பேரணி நடைபெற்றது. அண்ணா சிலை சந்திப்பில் பேரணியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், முன்னாள் மேயர் இரா.கஸ்தூரி தங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிமுக அரசுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் விநியோகம் செய்தனர். பேரணி பாளையங்கோட்டை சாலை வழியாக திரேஸ்புரத்தில் நிறைவடைந்தது. சுமார் 200 இளைஞர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x